search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்
    X

    விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்

    • ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்காக 95 வாகனங்களின் சேவைகளை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • தமிழகத்தின் 21 மாவட்டங்களில் கட்டப்பட்ட 400 வகுப்பறை கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

    சென்னை தலைமை செயலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்காக ரூ.8.46 கோடி மதிப்பிலான 95 வாகனங்களின் சேவைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தமிழகத்தின் 21 மாவட்டங்களில் ரூ.64.44 கோடி செலவில் கட்டப்பட்ட 400 வகுப்பறை கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் மானியக் கோரிக்கையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ், நடப்பாண்டில் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட காலிப்பணியிடங்களில் அவர்களது சாதனைகள் மற்றும் கல்வித்தகுதியின் அடிப்படையில் பணி ஆணை வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    அதன்படி, முதற்கட்டமாக, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த 84 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பள்ளிக்கல்வித் துறை, தொழில் துறை, எரிசக்தித் துறை, கூட்டுறவுத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலைத் துறை போன்ற 14 அரசுத் துறைகளில் இளநிலை உதவியாளர், உதவியாளர், இளநிலை வரைவு அலுவலர், கூட்டுறவு சங்கங்களில் இளநிலை மற்றும் முதுநிலை ஆய்வாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

    நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×