என் மலர்
தமிழ்நாடு
X
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் அஞ்சலி
Byமாலை மலர்15 Dec 2024 11:49 AM IST (Updated: 15 Dec 2024 12:48 PM IST)
- முதலமைச்சர் மாலை அணிவித்து இளங்கோவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
- ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று காலை அவர் மரணம் அடைந்தார்.
மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து நேற்று அஞ்சலி செலுத்தினார். அவரைத்தொடர்ந்து துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்தினார். முதலமைச்சர் மாலை அணிவித்து இளங்கோவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
முன்னதாக, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Next Story
×
X