search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்களுக்கு பாராட்டுக்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்களுக்கு பாராட்டுக்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • 1,500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று இருந்தனர்.
    • தமிழ் மண்ணின் கலைகளைக் காக்கும் உங்களது தொண்டு வாழிய! என்று கூறியுள்ளார்.

    சென்னை:

    சென்னை நகரில் பல வகையான கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் திருவிழாவின்போது 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' என்ற மாபெரும் கலைவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த திருவிழாவை கலை பண்பாட்டுத் துறை நடத்தி வருகிறது.

    இந்த ஆண்டின் 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' கலைநிகழ்ச்சிகள் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. இதனை கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முரசு கொட்டி தொடங்கி வைத்தார்.

    இந்த திருவிழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தேர்வு செய்யப்பட்ட 1,500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று இருந்தனர். இந்நிகழ்ச்சியின் நிறைவு நாளான நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார்.

    இதனை தொடர்ந்து 'சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா'வில் பங்கேற்ற கலைஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஜன.13 முதல் 17 வரை நடைபெற்ற நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்று மக்களை மகிழ்வித்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு என்னுடைய பாராட்டுகள்! வாழ்த்துகள்!

    தமிழ் மண்ணின் கலைகளைக் காக்கும் உங்களது தொண்டு வாழிய! என்று கூறியுள்ளார்.



    Next Story
    ×