என் மலர்
தமிழ்நாடு
X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
மாசற்ற மனதுக்கும், தூய அன்பிற்கும் சொந்தக்காரர்... விஜயகாந்தை நினைவு கூர்ந்த மு.க.ஸ்டாலின்
Byமாலை மலர்28 Dec 2024 10:59 AM IST (Updated: 28 Dec 2024 11:57 AM IST)
- விஜயகாந்த் நினைவிடத்தில் தொண்டர்கள், ரசிகர்கள் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
- தலைவர்கள் பலரும் விஜயகாந்தை நினைவு கூர்ந்து வருகின்றனர்.
சென்னை:
மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் தொண்டர்கள், ரசிகர்கள் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே தலைவர்கள் பலரும் விஜயகாந்தை நினைவு கூர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் - கேப்டன் விஜயகாந்த் அவர்களை நினைவுகூர்கிறேன்! என்று பதிவிட்டுள்ளார்.
மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் - கேப்டன் விஜயகாந்த் அவர்களை நினைவுகூர்கிறேன்!#Vijayakanth pic.twitter.com/aE3OR2MOZl
— M.K.Stalin (@mkstalin) December 28, 2024
Next Story
×
X