என் மலர்
தமிழ்நாடு

மாநில சுயாட்சி, இருமொழி கொள்கைதான் என்னுடைய பிறந்தநாள் வாழ்த்து செய்தி - மு.க.ஸ்டாலின்

- பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- பிறந்தநாளையொட்டி மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை :
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., தமிழக அமைச்சர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிறந்தநாளையொட்டி மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேப்பேரியில் பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதனிடையே, குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோபாலாபுரத்தில் உள்ள தயாரிடம் ஆசிபெற்றார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், நேற்றைய தினம் நடைபெற்ற என்னுடைய பிறந்தநாள் விழா கூட்டத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் முன்னிலையில் தெளிவாக பேசியுள்ளேன். மாநிலத்தில் சுயாட்சி வேண்டும். குறிப்பாக இந்தி திணிப்பை கைவிட வேண்டும். இருமொழிக் கொள்கையை கொண்டு வரவேண்டும். அதுதான் என்னுடைய பிறந்தநாளுக்கான வாழ்த்து செய்தி. வேற எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. என்னுடைய கவலை எல்லாம் நாட்டைப்பற்றி, மாநிலத்தை பற்றி, மாநிலத்திற்கான உரிமையை பெறுவது பற்றித்தான் என்றார்.