என் மலர்
தமிழ்நாடு
தமிழ்நாடு அரசின் விலையில்லா பொங்கல் சேலைக்கு நன்றி தெரிவித்த பெண்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
- பொங்கல் பண்டிகை ஒவ்வொருவரின் மனதில் மகிழ்ச்சியையும், உடலில் உற்சாகத்தையும் கொண்டுவரட்டும்! என்று பதிவிட்டு இருந்தார்.
- பூக்கும் புன்னகை ஒவ்வொன்றிலும் மனம் நிறைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு தமிழகத்தில் 2.21 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு கடந்த வாரம் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து எக்ஸ் தள பக்கத்தில் டாக்டர். மாளவிகா ஐயர் என்பவர், தமிழக அரசு வழங்கிய இலவச சேலை அணிந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, தமிழக அரசின் விலையில்லா பொங்கல் சேலையில், விலை மதிப்பில்லாத புன்னகையுடன் உங்கள் மாளவிகா! பொங்கல் பண்டிகை ஒவ்வொருவரின் மனதில் மகிழ்ச்சியையும், உடலில் உற்சாகத்தையும் கொண்டுவரட்டும்! என்று பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், மாளவிகாவின் எக்ஸ் தள பக்கத்தை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- பூக்கும் புன்னகை ஒவ்வொன்றிலும் மனம் நிறைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
பூக்கும் புன்னகை ஒவ்வொன்றிலும் மனம் நிறைகிறேன்? https://t.co/DGKKKY4WB2
— M.K.Stalin (@mkstalin) January 14, 2025