என் மலர்
தமிழ்நாடு

தர்மேந்திர பிரதான் சென்னை வருகையை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

- தமிழகத்தையும், தமிழக மாணவர்கள் எதிர்காலத்தையும் சிதைக்கும் மத்திய அரசு.
- தர்மேந்திர பிரதானின் சென்னை வருகையை கண்டித்து முற்றுகை மற்றும் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என்றும் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய 2152 கோடி ரூபாய் இன்று வரை ஒதுக்காமலும், தமிழகத்தையும், தமிழக மாணவர்கள் எதிர்காலத்தையும் சிதைக்கும், ஒன்றிய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சென்னை வருகையை கண்டித்து வருகிற 28 அன்று முற்றுகை மற்றும் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என்றும் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய 2152 கோடி ரூபாய் இன்று வரை ஒதுக்காமலும், தமிழகத்தையும், தமிழக மாணவர்கள் எதிர்காலத்தையும் சிதைக்கும், ஒன்றிய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களின் சென்னை வருகையை கண்டித்து வருகிற 28…
— Selvaperunthagai K (@SPK_TNCC) February 21, 2025