என் மலர்
தமிழ்நாடு
ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
- நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
- ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டது.
காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டதையடுத்து வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஈவிகேஎஸ் இளங்கோவன் (75) உயிரிழந்தார். இதையடுத்து மருத்துவமனை முன்பு காங்கிரஸ் நிர்வாகிகள் குவிய தொடங்கினர்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதையடுத்து அவரது உடல் மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன் பின்னர் நாளை சென்னை சத்திய மூர்த்தி பவனில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
முன்னதாக ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவையொட்டி தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கட்சிக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவு காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.