search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வாக்கு எண்ணிக்கை முடிந்தது.. பாஜக மாவட்ட தலைவர்கள் பட்டியல் விரைவில் வெளியாகிறது
    X

    வாக்கு எண்ணிக்கை முடிந்தது.. பாஜக மாவட்ட தலைவர்கள் பட்டியல் விரைவில் வெளியாகிறது

    • ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக வாக்குகள் வாங்கிய 3 பேரை தேர்வு செய்தனர்.
    • பட்டியலில் ஒருவரை தலைவராக தேர்வு செய்து அகில இந்திய தலைமை விரைவில் அறிவிக்கும்.

    தமிழகத்தில்பாஜக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. மாவட்ட தலைவர்களை தேர்ந்து எடுக்கும் தேர்தல் 66 மாவட்டங்களில் நடந்து முடிந்து உள்ளது.

    இந்த தேர்தலில் கிளை, நகரம், மண்டலம், மாவட்ட, முன்னாள் நிர்வாகிகள் வாக்களித்தனர். ஒவவொரு மாவட்டத்திற்கும் 3 பேரை தேர்வு செய்யும் வகையில் 3 பெயர்களை எழுதி வாக்கு பெட்டியில் போட வேண் டும் என்ற அடிப்படையில் இத்தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்து பெட்டிகள் சென்னை யில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன.

    இதைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகளான சக்கரவர்த்தி, கராத்தே தியாகராஜன், வி.பி.துரை சாமி, சுமதி வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் இன்று காலை மாவட்ட வாரியாக வாக்கு எண்ணிக்கை நடந்தது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக வாக்குகள் வாங்கிய 3 பேரை தேர்வு செய்தனர். யார் பெயர் அதிகமாக வாக்கு சீட்டில் குறிப்பிடப்பட்டு இருந்ததோ அதில் இருந்து 3 பேரை தேர்வு செய்ய வேண்டும் என்பது தேர்தல் விதிமுறை.

    அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு மையக் குழுவிடம் ஒப்படைத்தனர். மையக்குழு அந்த பட்டியலை டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு அனுப்புவார்கள்.

    மாவட்டம் வாரியாக அனுப்பப்படுகின்ற பட்டியலில் ஒருவரை தலைவராக தேர்வு செய்து அகில இந்திய தலைமை விரைவில் அறிவிக்கும் என்று கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    Next Story
    ×