search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன்பு  திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி
    X

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன்பு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி

    • 4 ஆண்டுகளாக இருவரும் காதலித்துவந்த நிலையில் குடும்பத்தினர் சம்மதத்துடன் இன்று காதல் திருமணம் செய்து கொண்டனர்.
    • ஏராளமானோர் மணமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள், திருமண வாழ்த்துக்கள் என்ற முழக்கத்தோடு அட்சதை தூவி வாழ்த்தி ஆசிர்வதித்தனர்.

    மதுரை:

    நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த காதலர்களான காமாட்சி மற்றும் தர்னிகா புத்தாண்டு தினத்தில் மீனாட்சியம்மன் கோவில் முன்பாக திருமணம் செய்து கொண்டனர்.

    4 ஆண்டுகளாக இருவரும் காதலித்துவந்த நிலையில் குடும்பத்தினர் சம்மதத்துடன் இன்று காதல் திருமணம் செய்து கொண்டனர். அப்போது காதலிக்கு காதலன் மாங்கல்யம் கயிறை கட்டியபோது கூடியிருந்த நண்பர்கள், குடும்பத்தினர், குழந்தைகள் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் என ஏராளமானோர் மணமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள், திருமண வாழ்த்துக்கள் என்ற முழக்கத்தோடு அட்சதை தூவி வாழ்த்தி ஆசிர்வதித்தனர்.

    உலகமெங்கும் புத்தாண்டு மகிழ்ச்சியோடு கொண்டாடப்படக்கூடிய நாளில் எங்களுடைய காதல் திருமணம் நடந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இன்றைய நாள் போலவே என்றும் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் எனவும், மீனாட்சி அம்மனின் தரிசனத்தோடு எங்களுக்கு காதல் திருமணம் புத்தாண்டு நாளில் நடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும், குடும்பத்தினர் ஆசிர்வாதத்தோடு மீனாட்சி அம்மனின் ஆசிர்வாதத்தோடும் எங்கள் திருமணம் நடந்துள்ளது எனவும் புதுமண தம்பதியினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×