என் மலர்
தமிழ்நாடு

X
சீமான் பற்றி பேச விரும்பவில்லை- துணை முதலமைச்சர்
By
மாலை மலர்4 Feb 2025 12:30 PM IST

- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்சிசி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
- தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சென்னை கலைவாணர் அரங்கில் குடியரசு தினவிழா பேரணியில் பங்கேற்ற என்சிசி மாணவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்சிசி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் அவர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.
பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு,
* சென்னையில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்.
இது பெரியார் மண் அல்ல; பெரியாரே ஒரு மண் தான் என்று சீமான் பேசியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அவர், "சீமானுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை" என்று கூறினார்.
Next Story
×
X