என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![கமல்ஹாசனை சந்தித்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கமல்ஹாசனை சந்தித்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/13/9263707-kamal.webp)
கமல்ஹாசனை சந்தித்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பல்வேறு துறைகள் சார்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொண்ட கமல் சாருக்கு என் அன்பும், நன்றியும் என தெரிவித்துள்ளார்.
- தி.மு.க. சார்பில் கமல்ஹாசன் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளதாக தகவல் வெளியானது.
சென்னை:
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு பேசியுள்ளார்.
இந்த சந்திப்பானது சென்னையில் உள்ள கமல்ஹாசன் இல்லத்தில் நடைபெற்றுள்ளது. கமல்ஹாசன் அமெரிக்கா சென்று திரும்பிய நிலையில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்ததாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளார்.
![](https://media.maalaimalar.com/h-upload/2025/02/13/9263708-kamal0.webp)
இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மேலும் கூறியிருப்பதாவது:- மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் - கலைஞானி கமல்ஹாசன் சாரை இன்று அவருடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அன்போடு வரவேற்று அரசியல், கலை என பல்வேறு துறைகள் சார்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொண்ட கமல் சாருக்கு என் அன்பும், நன்றியும் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு, மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பேசியிருந்தார். இதனை தொடர்ந்து, தி.மு.க. சார்பில் கமல்ஹாசன் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் - கலைஞானி @ikamalhaasan சாரை இன்று அவருடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அன்போடு வரவேற்று அரசியல், கலை என பல்வேறு துறைகள் சார்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொண்ட கமல் சாருக்கு என் அன்பும், நன்றியும்.@maiyamofficial pic.twitter.com/y13skmSLvR
— Udhay (@Udhaystalin) February 13, 2025