search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொள்ளாச்சி விவகாரம்- சபாநாயகரிடம் ஆதாரங்களை அளித்த திமுக, அதிமுக
    X

    பொள்ளாச்சி விவகாரம்- சபாநாயகரிடம் ஆதாரங்களை அளித்த திமுக, அதிமுக

    • பொள்ளாச்சி விவகாரத்தில் 12 நாட்களுக்கு பின்னர் FIR பதிவு என்பதற்கான ஆதாரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
    • இரு தரப்பும் ஆதாரங்களை வழங்கிய நிலையில் இன்று காரசார விவாதம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    இந்தாண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடரின் கடைசி நாள் நிகழ்வு இன்று தொடங்கியது. அப்போது, பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான ஆதாரங்களை திமுக மற்றும் அதிமுகவினர் வழங்கியுள்ளனர்.

    எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் 20 பேர் சென்று சபாநாயகரிடம் ஆதாரங்களை வழங்கியுள்ளனர்.

    பொள்ளாச்சி விவகாரத்தில் 12 நாட்களுக்கு பின்னர் FIR பதிவு என்பதற்கான ஆதாரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

    இரு தரப்பும் ஆதாரங்களை வழங்கிய நிலையில் இன்று காரசார விவாதம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக, நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பொள்ளாச்சி சம்பவத்தில் 24 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார். இதனால் சபாநாயகர் அப்பாவு இருதரப்பும் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவித்து இருந்தார். இதனால் சபாநாயகர் அப்பாவு உத்தரவை ஏற்று இருதரப்பிலும் ஆதாரங்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×