என் மலர்
தமிழ்நாடு
8-ந்தேதி தி.மு.க. கண்டன பொதுக்கூட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவடியில் பேசுகிறார்
- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாதவரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
- சோழிங்கநல்லூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுகின்றனர்.
சென்னை:
மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறி தி.மு.க. சார்பில் வருகிற 8-ந்தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது.
இதில் பேசுபவர்கள் பட்டியலை தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டு உள்ளது.
அதன்படி ஆவடியில் நடைபெறும் கண்டனப் பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இதில் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற பொறுப்பாளர்கள் பங்கேற்கிறார்கள். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாதவரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
பொதுச்செயலாளர் துரைமுருகன் அணைக்கட்டிலும், பாளையங்கோட்டையில் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.யும் பேசுகிறார்கள். திருவண்ணாமலையில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உசிலம்பட்டியில் டி.கே.எஸ்.இளங்கோவன், லால்குடியில் அமைச்சர் கே.என்.நேரு, திண்டிவனத்தில் அமைச்சர் பொன்முடி பங்கேற்கிறார்கள்.
செங்கல்பட்டில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அமைச்சர் கோ.வி.செழியன், கொளத்தூரில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சோழிங்கநல்லூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுகின்றனர்.
மொத்தம் 72 ஊர்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அந்தந்த பகுதி அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்கிறார்கள்.