என் மலர்
தமிழ்நாடு
மணிப்பூர் விவகாரம்.. த.வெ.க. தலைவர் விஜய்க்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி பதிலடி
- இங்க நம் வேங்கைவயல் என்ற ஊரில் என்ன நடந்தது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
- மூகநீதி பேசும் இங்குள்ள அரசு அதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டார்.
அந்நிகழ்வில் பேசிய அவர், "இன்று மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவை எதையும் கண்டுக் கொள்ளாமல் ஒரு அரசு மேலிருந்து நம்மை ஆட்சி செய்கிறது. அங்கு தான் அரசு அப்படி இருக்கிறது என்றால், இங்கு இருக்கும் அரசு எப்படி இருக்கிறது?
இங்க நம் வேங்கைவயல் என்ற ஊரில் என்ன நடந்தது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். சமூகநீதி பேசும் இங்குள்ள அரசு அதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இத்தனை வருடங்கள் கழித்தும் ஒரு துரும்பையும் கிள்ளி போடவில்லையே. இதையெல்லாம் இன்று அம்பேத்கர் அவர்கள் பார்த்தால் வெட்கப்பட்டு தலைகுனிந்து போவார்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் வேங்கைவயல் சம்பவம் குறித்து விஜய் பேசியது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், "மணிப்பூரையும் தமிழ்நாட்டையும் ஒப்பிடுவது என்பது, அரசியலில் மேடையேறி விட்டால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதுபோல் உள்ளது. மணிப்பூரில் உள்ள பிரச்சனைகள் நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இது பாஜக மணிப்பூருக்கு சென்று நியாயம் வழங்காமல் இருப்பதை விட இது மோசமானது" என்று தெரிவித்தார்.