என் மலர்
தமிழ்நாடு

X
சென்னையில் பரபரப்பு: கோட்டூர்புரத்தில் இரட்டைக் கொலை
By
மாலை மலர்17 March 2025 3:12 AM IST

- கோட்டூர்புரத்தில் 2 பேரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர்.
- படுகொலை செய்யப்பட்ட சுரேஷ், காஞ்சிபுரம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி.
சென்னை:
சென்னை, கோட்டூர்புரத்தில் அருண் மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேரை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், படுகொலை செய்யப்பட்ட சுரேஷ், காஞ்சிபுரம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என தகவல் வெளியானது.
கோட்டூர்புரத்தில் 2 பேரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
X