என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பு போதைப்பொருள்- திருச்சி விமான நிலையத்தில் சிக்கியது
    X

    மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பு போதைப்பொருள்- திருச்சி விமான நிலையத்தில் சிக்கியது

    • விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
    • சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த பயணி ஒருவரிடம் தீவிர சோதனை செய்தனர்.

    திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்படுவதும், அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தது.

    இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த பயணி ஒருவரிடம் தீவிர சோதனை செய்தனர்.

    இதில் அந்த பயணி தனது உடைமையில் மறைத்து வைத்திருந்த ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ ஹைட்ரோபோனிக் போதைப்பொருளை கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர் யார்? போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் அவருக்கு உள்ள தொடர்பு? இந்தியாவில் அவற்றை எங்கெங்கு சப்ளை செய்ய திட்டமிட்டிருந்தார் என பல கோணங்களில் கிடுக்குப்பிடி விசாரணை நடக்கிறது.

    ஏற்கனவே கடந்த 1-ந்தேதி பாங்காக்கில் இருந்து மலேசியா வழியாக திருச்சிக்கு வட்ந்ஹ விமானத்தில் பெண் பயணியிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    அந்த பெண் பயணியை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பிடிபட்டது விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×