என் மலர்
தமிழ்நாடு
கொல்லைபுறமாக ஆட்சியை பிடித்துள்ளது திமுக- இபிஎஸ்
- டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது அதிமுக.
- எந்த திட்டமும் கொண்டு வராமல் அதிக கடனை வாங்கி உள்ளது திமுக அரசு.
சென்னை:
அ.தி.மு.க. பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
* மக்கள் பிரச்சனைகளுக்காக மக்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டும்.
* பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி கொல்லைபுறமாக ஆட்சியை பிடித்துள்ளது திமுக.
* காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது அதிமுக ஆட்சியில் தான்.
* டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது அதிமுக.
* விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.
* அதிமுக ஆட்சியில் அத்தனை புயல்களை எதிர்கொண்டோம்.
* மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு கொண்டு வந்தது அதிமுக.
* ஏழை எளிய மக்களின் மருத்துவ கனவை நிறைவேற்றியது அதிமுக.
* அத்திக்கடவு அவினாசி திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.
* கொரோனா காலத்தில் மக்கள் பசியாற அம்மா உணவகத்தில் இலவச உணவு அளிக்கப்பட்டது.
* குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்த விவசாயிகள் வயிற்றில் பால் வார்த்தது அதிமுக அரசு.
* எந்த திட்டமும் கொண்டு வராமல் அதிக கடனை வாங்கி உள்ளது திமுக அரசு என்று பேசினார்.