search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஞானசேகரனுடன் பேசிய அந்த SIR யார்?  - எடப்பாடி பழனிசாமி மீண்டும் கேள்வி
    X

    ஞானசேகரனுடன் பேசிய அந்த SIR யார்? - எடப்பாடி பழனிசாமி மீண்டும் கேள்வி

    • போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளதற்கு கண்டனம்.
    • குமரி கண்ணாடி பாலம் திட்டம் குறித்து மத்திய அரசிடம் நாங்கள் கோரிக்கை விடுத்தோம்.

    சென்னை:

    அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    * அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்தி அதிர்ச்சி தருகிறது.

    * அண்ணா பல்கலைகழக விவாரத்தில் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    * ஞானசேகரனுடன் பேசிய அந்த சார் யார்? மாணவி அளித்த புகாரில் தான் இன்னொருவர் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

    * இந்த வழக்கில் உண்மையான குற்றவாளி தப்பித்து விடக்கூடாது.

    * காவல்துறை ஆணையருடன் முரண்பட்டு உயர்கல்வி அமைச்சர் பேசுகிறார்.

    * பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இத்தனை அமைச்சர்கள் பேசுவதற்கு என்ன காரணம்.

    * யாரை காப்பாற்றுவதற்கு அரசு முயற்சி செய்கிறது? இவ்வளவு பயம் ஏன்?

    * பாதிக்கப்பட்ட பெண் அளித்த முதல் தகவல் அறிக்கையில் பதிவிடப்பட்ட அந்த நபரை காப்பாற்றவே தொடர்ந்து அமைச்சர்கள் பேசுகின்றனர்.

    * பொள்ளாச்சி விவகாரத்தில் உடனடியாக சிபிஐ வசம் வழக்கு விசாரணையை ஒப்படைத்தோம்.

    * புதுக்கோட்டை ஆவுடையார் கோவிலில் செவிலியருக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது.

    * பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளித்தாலும் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை.

    * தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது.

    * ஆட்சி மீதான பழியை மறைப்பதற்காகவே அமைச்சர்கள் மாறிமாறி அறிக்கை வெளியிடுகின்றனர்.

    * போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளதற்கு கண்டனம்.

    * மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உண்மை குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தரவே அதிமுக போராட்டம் நடத்தியது.

    * போராட்டம் நடத்துவோரை கைது செய்ய 1000 போலீசார் வருகின்றனர், பாலியல் விவகாரத்தில் இந்த வேகத்தை காட்டாதது ஏன்?

    * குமரி கண்ணாடி பாலம் திட்டம் குறித்து மத்திய அரசிடம் நாங்கள் கோரிக்கை விடுத்தோம். மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, மன்சுக் மாண்டவியாவுடன் இந்த கோரிக்கையை வைத்தோம்.

    * கொரோனா காரணமாக பணிகள் தடைப்பட்ட நிலையில் திமுக ஆட்சியில் செய்து முடிக்கப்பட்டுள்ளது என்றார்.

    Next Story
    ×