search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிங்கை ராமச்சந்திரன் மாணவரணி செயலாளராக நியமனம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
    X

    சிங்கை ராமச்சந்திரன் மாணவரணி செயலாளராக நியமனம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

    • கழக கொள்கை பரப்பு துணைச்செயலாளராக எஸ்.ஆர்.விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • கழக தகவல் தொழில்நுட்பப்பிரிவு தலைவராக எம்.கோவை சத்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணிச் செயலாளர், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் மற்றும் கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

    சிங்கை ஜி ராமச்சந்திரன் அ.தி.மு.க.வின் மாணவரணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கழக கொள்கை பரப்பு துணைச்செயலாளராக எஸ்.ஆர்.விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கழக புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளராக கோவிலம்பாக்கம் சி.மணிமாறன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கழக தகவல் தொழில்நுட்பப்பிரிவு தலைவராக எம்.கோவை சத்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×