என் மலர்
தமிழ்நாடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மவுன சாமியாராக இருப்பது கடும் கண்டனத்திற்குரியது- எடப்பாடி பழனிசாமி
- மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுக, பாஜக, நாம் தமிழர், பாமக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே இந்த சம்பவத்தில் வேறு ஒருவருக்கு தொடர்பு உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும், மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுக, பாஜக, நாம் தமிழர், பாமக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் யார் அந்த சார்? என்று கேட்டும் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பெண்களுக்கு எதிராக இத்தனை கொடூரங்கள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் நடைபெறுவதாக, தினமும் நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வரும்போது, காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மவுன சாமியாராக இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிராக இத்தனை கொடூரங்கள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் நடைபெறுவதாக, தினமும் நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வரும்போது, காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு. @mkstalin, மவுன சாமியாராக இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
— AIADMK IT WING - Say No To Drugs & DMK (@AIADMKITWINGOFL) January 3, 2025
-மாண்புமிகு கழகப்… pic.twitter.com/VxaZNFVkeZ