search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சாதி பாகுபாடுகளுக்கு எதிராக போராடியவர் அய்யா வைகுண்டர்-  எடப்பாடி பழனிசாமி
    X

    சாதி பாகுபாடுகளுக்கு எதிராக போராடியவர் அய்யா வைகுண்டர்- எடப்பாடி பழனிசாமி

    • "தாழக் கிடப்போரைத் தற்காப்பதே தர்மம்" என்னும் கொள்கையைப் பரவலாக்கம் செய்தவர் அய்யா வைகுண்டர்.
    • நாம் ஒவ்வொருவரும் அறம்சார்ந்து வாழ வேண்டும், பொய் பேசக்கூடாது.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    "தாழக் கிடப்போரைத் தற்காப்பதே தர்மம்" என்னும் கொள்கையைப் பரவலாக்கம் செய்தவர், சாதி பாகுபாடுகளுக்கு எதிராக போராடியவர், அய்யா வைகுண்டர்.

    ஒவ்வொரு ஆண்டும், மாசி 20-ம் தேதி சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அய்யா அவர்களின் 193வது அவதார தினமான இன்று அவர்தம் திருப்பாதங்களை போற்றி வணங்குகிறேன்.

    நாம் ஒவ்வொருவரும் அறம்சார்ந்து வாழ வேண்டும், பொய் பேசக்கூடாது. எளிமையாய் வாழ வேண்டும் எனும் அய்யா வழியை பின்பற்றும் அனைவருக்கும் இந்நன்னாளில் எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×