search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபுவை புகழ்ந்த இ.பி.எஸ்? அ.தி.மு.க.வில் சலசலப்பு
    X

    ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபுவை புகழ்ந்த இ.பி.எஸ்? அ.தி.மு.க.வில் சலசலப்பு

    • தி.மு.க. அமைச்சர்களுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் நெருக்கம் காட்டி வருவதாகவும் எனக்கு தகவல் கிடைத்து உள்ளது.
    • அ.தி.மு.க.வினருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் பல்வேறு கருத்துக்களை எடப்பாடி பழனிசாமி.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலமாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

    இதில், 82 மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் தங்களது மாவட்டங்களில் இருந்தபடியே பங்கேற்றனர்.

    சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது பற்றியும், பூத் கமிட்டிகளை முழுமையாக அமைத்து கட்சியை பலப்படுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.

    அ.தி.மு.க.வினருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் பல்வேறு கருத்துக்களை எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

    அப்போது அவர், "திருச்சி உள்பட பல மாவட்டங்களில் தி.மு.க. அமைச்சர்களுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் நெருக்கம் காட்டி வருவதாகவும் எனக்கு தகவல் கிடைத்து உள்ளது. அது போன்று செயல்படுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன். அவர்களை கட்சியில் இருந்து நீக்குவேன்" என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருக்கிறார்.

    இந்த நிலையில், அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், சென்னை மாவட்ட நிர்வாகிகளிடம் பேசியபோது அமைச்சர் சேகர்பாபுவை இ.பி.எஸ் புகழ்ந்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    Next Story
    ×