என் மலர்
தமிழ்நாடு
அதிமுக தலைமை அலுவலகத்தில் பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே வழங்கிய இபிஎஸ்
- எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
- அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை சுட்டிக் காட்டி பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியா ? புறக்கணிப்பா ? என்பது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது.
முன்னதாக, செய்தியாளர்கள் சந்திப்பில், "நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் கையை விரித்து விட்டார். மத்திய அரசு தான் நீட் தேர்வை ரத்து செய்யமுடியும் என்று முதலமைச்சர் தற்போது கூறுகிறார். நீட் தேர்வு ரத்து என்று கூறி மாணவர்கள், பெற்றோர்களை திமுக அரசு ஏமாற்றி விட்டது" என்றார்.
மேலும், தந்தை பெரியாருக்கு எதிராக பேசிய சீமானுக்கு கண்டனம் தெரிவித்தார். திமுக ஆட்சி மீடு குற்றச்சாட்டுகளை இபிஎஸ் அடுக்கினார்.
பின்னர், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை சுட்டிக் காட்டி, அதிமுக தலைமை அலுவலகத்தில் பெண்களுக்கு எடப்பாடி பழனிசாமி பெப்பர் ஸ்பிரே விநியோகித்தார்.
மேலும், அன்பு சகோதரிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் என்ற பெயரில் பெப்பர் ஸ்டிரோ மற்றும் எஸ்ஓஎஸ் உபகரணத்தையும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.