என் மலர்
தமிழ்நாடு
வெல்வோம் 200 - படைப்போம் வரலாறு! தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
- தி.மு.க. வேட்பாளரை எதிர்க்க முடியாததால் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளன.
- திமுக அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் பொய், அவதூறுகள் பொழுது சாய்வதற்குள் பொடிப்பொடியாகிவிடுகின்றனர்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவு பெறுகிறது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒட்டி தி.மு.க. தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
திராவிட மாடல் ஆட்சியில் ஈரோடு மாவட்டத்தின் நலன் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதி ஆர்கேவி சாலையில் ரூ.29 கோடியில் நவீன காய்கறி சந்தை வளாகம் திறக்கப்பட்டது. ஈரோடு ஈகேஎம் அப்துல் கனி மதரஸா ஆரம்பப் பள்ளியில் புதிதாக 5 வகுப்பறை, ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் திறக்கப்பட்டுள்ளன.
அரசு மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை, ஆதரவை சிதைக்க எதிர்க்கட்சிகளின் அவதூறு, பொய்கள் மக்கள் மன்றத்தில் எடுபடவில்லை. திமுக அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் பொய், அவதூறுகள் பொழுது சாய்வதற்குள் பொடிப்பொடியாகிவிடுகின்றன.
தி.மு.க. வேட்பாளரை எதிர்க்க முடியாததால் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளன. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசையும், தமிழ்நாட்டு மக்கள் சரியாக அடையாளம் கண்டு வைத்திருக்கிறார்கள்.
ஈரோடு கிழக்கு வாக்காளர்கள் இடைத்தேர்தலில் உதயசூரியனுக்கு அளிக்கும் மகத்தான வெற்றியின் வாயிலாக நிரூபிப்பர். பெரியார் பிறந்த மண்ணின் இடைத்தேர்தலில் நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்ணாக நம்முடைய வெற்றி அமையட்டும். 2026-ல் வெல்வோம் 200 படைப்போம் வரலாறு என்பதற்கு முன்னோட்டமாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி அமையட்டும்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.கழகத்தின் மாபெரும் வெற்றியை எதிர்நோக்குகிறேன், உடன்பிறப்புகளின் உழைப்பினாலும், மக்கள் மீது உள்ள நம்பிக்கையினாலும்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.