என் மலர்
தமிழ்நாடு
X
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தி.மு.க. வேட்பாளர் 17-ந்தேதி வேட்புமனு தாக்கல்
Byமாலை மலர்12 Jan 2025 12:41 PM IST
- ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
- தி.மு.க. வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வரும் 17-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
Next Story
×
X