என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![கல்வியை காவிமயமாக்கத் துடிக்கும் பாசிஸ்ட்டுகள்- உதயநிதி ஸ்டாலின் கல்வியை காவிமயமாக்கத் துடிக்கும் பாசிஸ்ட்டுகள்- உதயநிதி ஸ்டாலின்](https://media.maalaimalar.com/h-upload/2024/10/26/5673904-udhay.webp)
X
கல்வியை காவிமயமாக்கத் துடிக்கும் பாசிஸ்ட்டுகள்- உதயநிதி ஸ்டாலின்
By
மாலை மலர்26 Oct 2024 10:26 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சங்கத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
- திராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்க logo-வையும் வெளியிட்டோம்.
திராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்கம் தொடக்க விழா இன்று நடைபெற்றது. சங்கத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
திராவிட இயக்க சிந்தனையுடைய பேராசிரியர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் விதமாக நடைபெற்ற 'திராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்கத்தின்' தொடக்க விழாவில் இன்று பங்கேற்றோம். திராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்க logo-வையும் வெளியிட்டோம்.
மாநிலங்களின் கல்வி உரிமையை அபகரித்து நாடெங்கும் கல்வியை காவிமயமாக்கத் துடிக்கும் பாசிஸ்ட்டுகளின் முயற்சிகளை முறியடிக்கும் வகையில் திராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்கத்தின் பணிகள் அமையட்டும் என்று வாழ்த்தினோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
X