என் மலர்
தமிழ்நாடு
X
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு
Byமாலை மலர்5 Dec 2024 9:31 PM IST
- தொடர்ச்சியாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
- அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மீட்பு பணிகள் நடைபெறுவதை ஒட்டி விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 10 ஆம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
Next Story
×
X