search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2 மாட்டு வியாபாரிகளிடம் ரூ.4.20 லட்சம் பறிமுதல்- பறக்கும் படையினர் நடவடிக்கை
    X

    2 மாட்டு வியாபாரிகளிடம் ரூ.4.20 லட்சம் பறிமுதல்- பறக்கும் படையினர் நடவடிக்கை

    • ஈரோடு குமலன்குட்டை பகுதியில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனா்.
    • இருவரிடம் உரிய ஆவணங்கள் சமர்பித்து பெற்று செல்லலாம் என பறக்கும் படையினர் அறிவுறுத்தினர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 3 பறக்கும் படை, 3 நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இக்குழுவினர் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரும் பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் இன்று அதிகாலை வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது, அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில், காரை ஓட்டி வந்தவரிடம் ரூ.2 லட்சம் ரொக்கம் இருந்தது. அவரிடம் விசாரணை நடத்தியதில், அந்த நபர் கேரளா மாநிலத்தை சேர்ந்த மாட்டு வியாபாரி ரபீக் என்பதும், கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு மாடுகள் வாங்க பணத்தை எடுத்து வந்ததாக கூறியுள்ளார்.

    இருப்பினும், அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் ரூ.2 லட்சத்தையும் பறிமுதல் செய்து, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல், ஈரோடு குமலன்குட்டை பகுதியில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு வந்த காரில் சோதனை செய்தபோது, காரில் ரூ.2.20 லட்சம் ரொக்கம் இருந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கேரளாவை சேர்ந்த முனீர் என்பதும், கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு மாடு வாங்க பணத்தை எடுத்து வந்ததும் தெரியவந்தது.

    ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து, தேர்தல் பிரிவு கட்டுப்பாட்டு அலுவலரிடம் ஒப்படைத்தனர். இருவரிடம் உரிய ஆவணங்கள் சமர்பித்து பெற்று செல்லலாம் என பறக்கும் படையினர் அறிவுறுத்தினர். ஒரே நாளில் 2 வியாபாரிகளிடம் பறக்கும் படையினர் ரூ.4.20 லட்சம் பறிமுதல் செய்திருப்பது வெளிமாநில மாட்டு வியாபாரிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×