search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் 2 வாரங்களுக்கு பனிமூட்டம் காணப்படும்- வானிலை ஆய்வாளர்கள் தகவல்
    X

    தமிழ்நாட்டில் 2 வாரங்களுக்கு பனிமூட்டம் காணப்படும்- வானிலை ஆய்வாளர்கள் தகவல்

    • தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பனிமூட்டம் காணப்படும்.
    • நள்ளிரவு 2 மணிக்கு பிறகு குளிர் அதிகமாக இருக்கும்.

    கடந்த 2 தினங்களாக தமிழ்நாட்டில் பனியின் தாக்கம் மேலும் அதிகரித்து இருப்பதை பார்க்க முடிகிறது. அதிலும் சென்னையில் நேற்று கடும் பனிமூட்டம் இருந்தது.

    காலையில் 8 மணி வரை பனிமூட்டம் பல இடங்களில் தென்பட்டது. சென்னை மட்டுமல்லாது, வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் நேற்று பனிமூட்டம் இருந்தது. இன்றும் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பனிமூட்டம் காணப்படும்.

    இன்னும் 2 வாரங்களுக்கு தமிழ்நாட்டில் இதுபோல் பனிமூட்டம் விட்டு விட்டு காணப்படும் என்றும், அதிலும் நள்ளிரவு 2 மணிக்கு பிறகு குளிர் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×