என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![செங்கோட்டையன் புறக்கணிப்பு - கோகுல இந்திரா அதிருப்தி : ஜெயக்குமார் விளக்கம் செங்கோட்டையன் புறக்கணிப்பு - கோகுல இந்திரா அதிருப்தி : ஜெயக்குமார் விளக்கம்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/10/9148183-jayakumar.webp)
செங்கோட்டையன் புறக்கணிப்பு - கோகுல இந்திரா அதிருப்தி : ஜெயக்குமார் விளக்கம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- எல்லா கட்சியை சேர்ந்த விவசாயிகள் நடத்திய பாராட்டு விழா.
- விவசாய கூட்டமைப்பினர் நடத்திய நிகழ்வில் அரசியல் கலப்பு இருக்கக்கூடாது.
சென்னை:
எடப்பாடி பழனிசாமியை பாராட்டி கோவையில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதுகுறித்து இன்று காலை அவர் விளக்கம் அளித்தார். அப்போது செங்கோட்டையன் கூறும்போது, திட்டப் பணிகளை தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்கள் மேடையில் இல்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று கூறினார்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அத்திக்கடவு-அவிநாசி திட்டம் எடப்பாடி ஆட்சிக்காலத்தில் தான் நிறைவுபெற்றது. எல்லா கட்சியை சேர்ந்த விவசாயிகள் நடத்திய பாராட்டு விழா. விவசாய கூட்டமைப்பினர் நடத்திய நிகழ்வில் அரசியல் கலப்பு இருக்கக்கூடாது.
அரசியல் கலப்பு இருக்க கூடாது என்பதற்காகவே தலைவர்களின் படங்கள் வைக்கப்படவில்லை. பாராட்டு விழாவை அதிமுக ஏற்பாடு செய்யவில்லை. கோகுல இந்திரா பொதுவெளியில் அதிருப்தியை வெளிப்படுத்தவில்லை என்றார்.