search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் பானி பூரி வியாபாரிக்கு அனுப்பப்பட்ட GST நோட்டீஸ்!
    X

    தமிழ்நாட்டில் பானி பூரி வியாபாரிக்கு அனுப்பப்பட்ட GST நோட்டீஸ்!

    • வங்கிகள் மட்டுமின்றி யுபிஐ அப்ளிகேஷன்களில் அதிக பரிவர்த்தனை செய்த நபர்களின் விவரங்களும் வருமான வரித்துறைக்கு அனுப்பப்படும்
    • வரம்பை தாண்டிய பிறகு ஜிஎஸ்டி பதிவு பெறாமல் சேவைகளை வழங்குவது குற்றம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    பானி பூரி கடை வியாபாரிக்கு GST நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரம் பேசுபொருளாகி உள்ளது.

    மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) துறை தமிழ்நாட்டை சேர்நத பானி பூரி வியாபாரிக்கு ஜிஎஸ்டி பதிவுக்கான நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த பானி பூரி விற்பனையாளர் 2023 முதல் 2024-ஆம் ஆண்டில் ஆன்லைன் மூலம் பானி பூரி விற்பனை செய்து ரூ.40 லட்சம் வருமானம் ஈட்டியுள்ளார்.

    ஆன்லைன் பேமெண்ட் (RazorPay, PhonePe) மூலம் பானி பூரி விற்பனையாளரின் பரிவர்த்தனைகளைக் கணக்கில் கொண்டு ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    வங்கிகள் மட்டுமின்றி யுபிஐ அப்ளிகேஷன்களில் அதிக பரிவர்த்தனை செய்த நபர்களின் விவரங்களும் வருமான வரித்துறைக்கு அனுப்பப்படும். அதன்படி இந்த பானி பூரி வியாபாரியை கண்டறிந்து அனுப்பட்டுள்ள நோட்டீஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த நோட்டீஸில், பிரிவு 70-இன் கீழ் பானி பூரி விற்பனையாளரை நேரில் வந்து ஆஜராகி, ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது. மேலும் வரம்பை தாண்டிய பிறகு ஜிஎஸ்டி பதிவு பெறாமல் சேவைகளை வழங்குவது குற்றம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×