என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![ஊட்டியில் ஒரு மாதத்துக்கு பிறகு மீண்டும் கொட்டும் உறைபனி- பொதுமக்கள் அவதி ஊட்டியில் ஒரு மாதத்துக்கு பிறகு மீண்டும் கொட்டும் உறைபனி- பொதுமக்கள் அவதி](https://media.maalaimalar.com/h-upload/2025/02/08/9069812-ooty.webp)
ஊட்டி குட்செட் பகுதியில் உறைபனி கொட்டிக்கிடந்த காட்சி.
ஊட்டியில் ஒரு மாதத்துக்கு பிறகு மீண்டும் கொட்டும் உறைபனி- பொதுமக்கள் அவதி
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg)
- கடந்த நவம்பர் மாதம் 22-ந்தேதி முதல் ஒரு வாரம் நீர்ப்பனிப்பொழிவின் தாக்கம் இருந்தது.
- ஊட்டியில் நேற்று குறைந்தபட்சமாக 7 டிகிரி செல்சியஸ், அதிகபட்சமாக 21 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை பனிக்காலம் நிலவும். இந்த நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக, அந்த மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை மற்றும் பனிக்காலமும் சற்று தாமதமாக தொட ங்கியது.
கடந்த நவம்பர் மாதம் 22-ந்தேதி முதல் ஒரு வாரம் நீர்ப்பனிப்பொழிவின் தாக்கம் இருந்தது. தொடர்ந்து நவம்பர் 25-ந்தேதிக்கு பிறகு உறைபனிக்காலம் தொடங்கியது. ஆனால் உறைபனி தொடங்கிய ஒரு வாரத்துக்குள் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தது. பின்னர் பெஞ்சல் புயலின் தாக்கம் காரணமாக உறைபனி குறைந்தது.
இந்த நிலையில் ஊட்டியில் டிசம்பர் மாதம் 25-ந்தேதி முதல் உறைபனியின் தாக்கம் மீண்டும் தொடங்கியது. இதன் காரணமாக தாவரவியல் பூங்கா, தலைக்குந்தா, படகு இல்லம், பைக்காரா, மார்க்கெட், குதிரை பந்தய மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பனி படர்ந்து காணப்பட்டது. மேலும் உறைபனி காரணமாக வனங்களில் பசுமை குறைந்து தேயிலை செடிகள் கருகின.
தை மாதம் தொடங்கிய நிலையில் பனியின் தாக்கம் மெல்ல குறைந்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் உறைபனி கொட்ட தொடங்கி உள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குளிர் அதிகரித்து பொதுமக்கள் அவதிப்பட்டனர். ஊட்டியில் நேற்று குறைந்தபட்சமாக 7 டிகிரி செல்சியஸ், அதிகபட்சமாக 21 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது. தைமாதம் முடிவடைய உள்ள நிலையில் ஊட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் உறைபனி யின் தாக்கம் அதிகரித்து காணப்படுவது, பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.