search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள்
    X

    வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள்

    • கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து 713 கனஅடியாக உள்ள நிலையில் 80 சதவீதம் நிரம்பியது.
    • புழல் ஏரியில் நீர்மட்டம் 18.80 அடியாக உள்ள நிலையில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    சென்னை:

    தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது.

    இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி விரைந்து நிரம்பி வருகிறது. கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து 713 கனஅடியாக உள்ள நிலையில் 80 சதவீதம் நிரம்பியது.

    கனமழை காரணமாக புழல் ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில் விரைவில் முழு நீர்மட்டத்தை எட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. 21 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் நீர்மட்டம் 18.80 அடியாக உள்ள நிலையில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    புழல் ஏரிக்கான நீர்வரத்து 629 கனஅடியாக உள்ள நிலையில் ஏரியின் பாதுகாப்பு நலன் கருதி அப்படியே வெளியேற்றப்படுகிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,300 மில்லியன் கனஅடியில் தற்போதைய நீர்இருப்பு 2,771 மில்லியன் கனஅடியாக உள்ளது.

    Next Story
    ×