என் மலர்
தமிழ்நாடு
X
காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றது.... 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
Byமாலை மலர்18 Dec 2024 1:15 PM IST
- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.
- நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு குறைவு.
சென்னை:
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடக்கு நோக்கி நகர்ந்து தமிழக, ஆந்திர கடற்கரையை அடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் காலை முதல் விட்டு விட்டு மழை பெய்துவரும் நிலையில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு குறைவு என்றும் கூறியுள்ளது.
Next Story
×
X