search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குன்னூரில் கடும் நீர்பனிப்பொழிவு- குளிரால் மக்கள் அவதி
    X

    குன்னூரில் பனிப்பொழிவு அதிகரிப்பு காரணமாக செடிகளில் படர்ந்து நிற்கும் பனித்துளிகளை காணலாம்.

    குன்னூரில் கடும் நீர்பனிப்பொழிவு- குளிரால் மக்கள் அவதி

    • மழை பெய்யாத நாட்களில் நீர்பனி காணப்பட்டது.
    • நீலகிரி மாவட்டத்தில் உறைபனிக்காலம் தொடங்கும் முன்பு வழக்கமாக நீர் பனிப்பொழிவு காணப்படும்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் நீர்பனி விழும். தொடர்ந்து நவம்பர் மாதம் 2-வது வாரத்திற்கு மேல் உறைபனி விழ தொடங்கும்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு கடந்த வாரம் வரை நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வந்த நிலையில், உறைபனி விழுவதில் தாமதம் ஏற்பட்டது.

    அதே சமயம் மழை பெய்யாத நாட்களில் நீர்பனி காணப்பட்டது. இதனால் மாலை நேரங்களில் குளிர் அதிகமாக காணப்பட்டது.

    குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீர்ப்பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இது சுற்றுலா பயணிகளை பரவசப்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது.

    அதிகாலை நேரத்தில் புல்வெளிகள், தேயிலை தோட்டம் மற்றும் மலர் செடிகளில் நீர்ப்பனி கண்ணாடி இழைகள் போல, முத்துக்கள் கொட்டிய மாதிரி காட்சி அளிக்கிறது. அதிலும் குறிப்பாக குன்னூர், ஜிம்கானா, கரும்பாலம், காட்டேரி, குன்னகம்பை, கொலகம்பை, கொல்லிமலை, கேத்திபாலடா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீர்ப்பனிப்பொழிவு காணப்பட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் உறைபனிக்காலம் தொடங்கும் முன்பு வழக்கமாக நீர் பனிப்பொழிவு காணப்படும். அந்த வகையில் தற்போது நீர்ப்பனிப்பொழிவு தொடங்கி இருப்பதால் இன்னும் ஒரு சில வாரங்களில் உறைப்பனிப்பொழிவு தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×