search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    1000Kms வேகம்.. 15 நிமிடங்களில் சென்னை-பெங்களூரு பயணம்.. ICF-இல் ரெடியாகும் ஹைப்பர்லூப் பாட்
    X

    1000Kms வேகம்.. 15 நிமிடங்களில் சென்னை-பெங்களூரு பயணம்.. ICF-இல் ரெடியாகும் ஹைப்பர்லூப் பாட்

    • மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்தார்.
    • ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் முழுக்க முழுக்க சென்னையில் உருவாக்கப்படுகிறது.

    சென்னையில் ஐ.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கி இருக்கும் ஹைப்பர்லூப் தொழில்நுட்ப பணிகளை மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஆய்வு செய்தார். குறைந்த காற்றழுத்த குழாயில் அதிவேகமாக பயணிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட போக்குவரத்து முறை தான் ஹைப்பர்லூப் என அழைக்கப்படுகிறது.

    இது உராய்வு மற்றும் எதிர்ப்பை குறைக்க மெக்னடிக் லீவியேஷன் (காந்த சக்தியில் மிதந்து செல்வது) மற்றும் உந்துவிசையை பயன்படுத்தி தற்போதைய போக்குவரத்து முறைகளை விட பலமடங்கு அதிவேகமாக செல்லும் திறனை ஹைப்பர்லூப் கொண்டிருக்கிறது.

    தற்போதைய சோதனைகளின் படி ஹைப்பர்லூப் மூலம் மணிக்கு அதிகபட்சம் 1000 கிலோமீட்டர்கள் வேகத்தில் பயணிக்க முடியும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி ஹைப்பர்லூப் பயன்படுத்தி சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு கிட்டத்தட்ட 15 முதல் 20 நிமிடங்களில் சென்றடைய முடியும்.

    இதற்காக சென்னையில் உள்ள ஐ.ஐ.டி. மெட்ராஸ் ஆய்வு குழு ஹைப்பர்லூப் பாட் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டம் மத்திய ரெயில்வே அமைச்சகத்துடன் இணைந்து உருவாகி வருகிறது. இந்த சோதனையை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், "ஹைப்பர்லூப் ஒரு புதிய பரிசோதனை. இதில், ஒரு வெற்றிடம் உருவாக்கப்படுகிறது. இந்த பாட் வழக்கமாக ரெயில்கள் தண்டவாளத்தில் இயக்கப்படுவதை போல் இல்லாமல், காந்த லீவியேஷன் மூலம் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்தத் திட்டம் சோதனை நிலையில் உள்ளது. இந்த திட்டத்தை உருவாக்க ஐ.ஐ.டி. மெட்ராஸ் எங்களுக்கு ஆதரவளித்து வருகிறது," என்று தெரிவித்தார்.

    தற்போது பரிசோதனை கட்டத்தில் உள்ள ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் முழுக்க முழுக்க சென்னையிலேயே, பெரும்பாலும் உள்நாட்டு தொழில்நுட்பங்களாலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் திட்டம் சென்னையிலேயே துவங்கிய நிலையில், ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் முழுக்க முழுக்க சென்னை ஐ.சி.எஃப்.-இல் உருவாக்கப்பட உள்ளது.



    Next Story
    ×