என் மலர்
தமிழ்நாடு

மாற்றுத்திறன் கொண்ட தோழர்களால் பிறந்தநாள் பரிசைப் பெற்றதாக உணர்கிறேன்- மு.க.ஸ்டாலின்

- மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்திட முக்கிய அறிவிப்புகளை நேற்று அறிவித்திருந்தேன்.
- மாற்றுத்திறன் கொண்ட தோழர்கள் என்னை அரவணைத்து – கைகளை இறுகப்பற்றிக் கொண்டனர்.
"மாற்றுத்திறன் கொண்ட தோழர்கள் என்னை அரவணைத்து – கைகளை இறுகப்பற்றிக் கொண்டு, "நன்றி" என்றபோது, என் பிறந்தநாள் பரிசைப் பெற்றதாக உணர்ந்தேன்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்திட, "உள்ளாட்சி மன்றங்களில் நியமன முறையில், உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும்" என நேற்று அறிவித்தேன்!
இன்று, மாற்றுத்திறன் கொண்ட தோழர்கள் என்னை அரவணைத்து – கைகளை இறுகப்பற்றிக் கொண்டு, "நன்றி" என்றபோது, என் பிறந்தநாள் பரிசைப் பெற்றதாக உணர்ந்தேன்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்திட, "உள்ளாட்சி மன்றங்களில் நியமன முறையில், உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும்" என நேற்று அறிவித்தேன்!இன்று, மாற்றுத்திறன் கொண்ட தோழர்கள் என்னை அரவணைத்து – கைகளை இறுகப்பற்றிக் கொண்டு, "நன்றி" என்றபோது, என் பிறந்தநாள் பரிசைப் பெற்றதாக… pic.twitter.com/hicGkS2GEt
— M.K.Stalin (@mkstalin) February 28, 2025