என் மலர்
தமிழ்நாடு
உடலில் உயிர் இருக்கும் வரை தமிழ் சமூகத்திற்கு உழைப்பேன்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
- சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.
சென்னை கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.
பின்னர், நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
என்னையும், கௌத்தூர் தொகுதியையும் பிரிக்க முடியாது. அதுபோல திமுகவையும், பொங்கலையும் பிரிக்க முடியாது.
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட 17-ம் தேதியும் விடுமுறை அறிவித்தோம்.
பொங்கல்தான் தமிழர்களுக்கான பண்டிகை என்றும் பெரியார் கூறினார். பொங்கல் பரிசாக திருக்குறளை தருகிறேன் எனக்கூறியவர் பெரியார். தமிழுக்காகவும், தமிழ் சமூகத்திற்காகவும் கடைசிவரை பாடுபட்டவர் பெரியார். பெண்களின் உரிமை உள்ளிட்டவற்றுக்காக பெரியார் தொடர்ந்து போராடி வந்தார். இன்று யார் யாரோ பெரியார் குறித்து பேசி வருகின்றனர். பெரியார் குறித்து அவதூறாக பேசுவோர் பற்றி பேசி, அவர்களை அடையாளம் காட்ட விரும்பவில்லை.
மகளிர் உரிமைத்தொகை, பெண்கள் இலவச பயணம் போன்ற திட்டங்களால் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை. அதை ஒப்புக்கொள்கிறேன். நிறைவேற்றாத ஒன்று, இரண்டு வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றுவோம். அதில் பின்வாங்க மாட்டோம்.
பதவி சுகத்திற்காக இல்லாமல், மக்கள் பணியாற்றவே முதல்வராகியுள்ளேன். தமிழ்நாட்டிற்கும், தமிழ் சமூகத்திற்கும் என் உடலில் உயிர் இருக்கும் வரை உழைப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.