search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    லண்டனில் இருந்து சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு
    X

    லண்டனில் இருந்து சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு

    • லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்திய இசைஞானி இளையராஜா இன்று சென்னை திரும்பினார்.
    • லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தி நாடு திரும்பிய இளையராஜாவை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.

    பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, லண்டனில் 'சிம்பொனி' இசையை அரங்கேற்றினார். அவரது 1½ மணி நேர இசை மழையில் ரசிகர்கள் உற்சாகத்துடன் நனைந்தனர்.

    ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனியை எழுதி அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற சாதனையை இளையராஜா படைத்துள்ளார். மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி ஆகிய சிம்பொனி இசைக்கலைஞர்கள் வரிசையில் இளையராஜாவும் இணைந்துள்ளார்.



    இந்த நிலையில், லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்திய இசைஞானி இளையராஜா இன்று சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக உற்வேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பா.ஜ.க. கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் திரைத்துறையினர் இளையராஜாவை வரவேற்றனர்.

    இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தி நாடு திரும்பிய இளையராஜாவை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. முதலமைச்சரின் ஆணைக்கிணங்க அரசின் சார்பில் இசைஞானி இளையராஜாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

    Next Story
    ×