என் மலர்
தமிழ்நாடு

X
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல்
By
மாலை மலர்8 March 2025 1:13 PM IST

- 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
- 14-ந்தேதி தமிழ்நாடு, புதுவையில் வறண்ட வானிலை நிலவும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 11-ந்தேதி குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
14-ந்தேதி தமிழ்நாடு, புதுவையில் வறண்ட வானிலை நிலவும்.
தமிழகத்தில் இன்று, நாளை, நாளை மறுநாள் என 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதிய வேளையில் 36 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் பதிவாகக்கூடும்.
Next Story
×
X