என் மலர்
தமிழ்நாடு

X
சென்னையில் வெயில் கொளுத்தும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
By
மாலை மலர்7 March 2025 1:18 PM IST

- 9-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவும்.
- 5 மாவட்டங்களில் வருகிற 11-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். மேலும் 9-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவும்.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை உயரும்.
சென்னையில் 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையாக 100 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகி வெயில் கொளுத்தும்.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூடத்துடன் இருக்கும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் இருக்கும்.
இதனிடையே, நெல்லை, தென்காசி, குமரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வருகிற 11-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Next Story
×
X