search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இந்தியா- இங்கிலாந்து டி20 போட்டி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்
    X

    இந்தியா- இங்கிலாந்து டி20 போட்டி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

    • சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.
    • விக்டோரியா ஹாஸ்டல் சாலை செல்ல பாரதி சாலை வழியாக மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

    ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1- 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இதன் எதிரொலியால், இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி நடைபெறுவதை ஒட்டி சென்னையில் நாளை மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

    விக்டோரியா ஹாஸ்டல் சாலை செல்ல பாரதி சாலை வழியாக மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படும். வாலாஜா சாலையில் செல்ல அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக இயக்கப்படும், பாரதி சாலையிலிருந்து பெல்ஸ் சாலை செல்ல அனுமதிக்கப்படும் என்றும் குடியரசு தின ஏற்பாட்டின் காரணமாக நேப்பியர் பாலத்தில் இருந்து கண்ணகி சிலை வரை சாலைகள் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×