என் மலர்
தமிழ்நாடு
தமிழ்நாட்டை போல் பிற மாநிலங்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக இல்லை- சிபிஐஎம்
- பாஜக 48, ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
- பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா வெற்றி முகத்தை எட்டியுள்ளார்.
டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.
பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. இதனை தொடர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. பாஜக 48, ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
மேலும், புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி அடைந்துள்ளார். எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா வெற்றி முகத்தை எட்டியுள்ளார்.
இந்நிலையில், டெல்லி தேர்தலில் பாஜக வெற்றி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருப்பது போல பிற மாநிலங்களில் இல்லை.
அதனால்தான், டெல்லியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது" என்றார்.