search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    1.62 லட்சம் கோடி கடன் வாங்குவது தான் முன்மாதிரி மாநிலமா?- அண்ணாமலை கேள்வி
    X

    1.62 லட்சம் கோடி கடன் வாங்குவது தான் முன்மாதிரி மாநிலமா?- அண்ணாமலை கேள்வி

    • டாஸ்மாக்கில் 40 சதவீத மதுபானங்கள் கணக்கில் வராமலே விற்பனை செய்யப்பட்டுள்ன.
    • செந்தில் பாலாஜி ஜாமினை ரத்து செய்வதற்கு அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கையானது வெற்றுக் காகிதம் போல் உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

    பட்ஜெட் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை பேசியதாவது:-

    தமிழகத்திற்கு பட்ஜெட்டுக்கு பதிலாக வெற்றுக் காகிதத்தை தாக்கல் செய்துவிட்டு போயிருக்கலாம். தமிழக அரசின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியை நெருங்குகிறது.

    தமிழ்நாட்டை விட குஜராத் உள் கட்டமைப்புக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாநில உள்கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அரசு கடன் வாங்கவில்லை.

    அரசு ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியதாரர்களுக்கான பென்சன் கொடுக்க கூடி தமிழக அரசிடம் நிதி இல்லை.

    1.62 லட்சம் கோடி கடன் வாங்குவது தான் முன்மாதிரி மாநிலமா ? மதுபான போக்குவரத்து தொடர்பாக ரூ.100 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளது.

    சத்தீஸ்கரில் நடைபெற்றது போல தமிழ்நாட்டிலும் டாஸ்மாக்கில் முறைகேடு நடைபெற்றுள்ளது. சத்தீஸ்கர் மாடலில் முறைகேடு நடந்திருந்தாலும் அங்கு நடைபெற்றதைவிட முறைகேடு அதிகம்.

    டாஸ்மாக்கில் 40 சதவீத மதுபானங்கள் கணக்கில் வராமலே விற்பனை செய்யப்பட்டுள்ன. செந்தில் பாலாஜி ஜாமினை ரத்து செய்வதற்கு அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாநில அரசு பதில் சொல்லும் வரை பாஜக தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும். அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கும் வரை பாஜக போராட்டத்தை தொடரும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×