search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரெயில் இருக்கையை சுத்தம் செய்த பெண்மணி
    X

    ரெயில் இருக்கையை சுத்தம் செய்த பெண்மணி

    • ரெயில்கள் தனது பயண இலக்கை அடைந்த பின்னரே தூய்மை பணிக்கு உட்படுத்தப்படும்.
    • பெண் பயணி ஒருவர், ஓடும் ரெயிலில் தனக்கு ஒதுக்குப்பட்டிருந்த இருக்கை, ரெயில் ஜன்னல் ஆகியவற்றை சுத்தம் செய்கிறார்.

    இந்தியாவில் ரெயில்களை சுத்தப்படுத்தும் பணியில் குறைபாடுகள் உள்ளன என புகார்கள் எழுவது வாடிக்கையான ஒன்று. நெடுந்தூரம் செல்லும் ரெயில்கள் தனது பயண இலக்கை அடைந்த பின்னரே தூய்மை பணிக்கு உட்படுத்தப்படும். இதனால் ரெயில் பயணிகள் கடும் அவதியடைவாா்கள்.

    இந்தநிலையில் ரெயில் பயணி ஒருவர் தான் பயணம் செய்த ரெயிலில் தூய்மை பணி மேற்கொண்ட சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில் ஏ.சி. வகுப்பு பெண் பயணி ஒருவர், ஓடும் ரெயிலில் தனக்கு ஒதுக்குப்பட்டிருந்த இருக்கை, ரெயில் ஜன்னல், படுக்கை ஆகியவற்றை கையுறை அணிந்து கொண்டு சுத்தம் செய்கிறார். இந்த வீடியோ 2 நாளில் 1¼ கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றது.

    Next Story
    ×