என் மலர்
தமிழ்நாடு
3-ந்தேதி நினைவுநாள்: அண்ணா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை
- மாவட்டக் கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- பிற மாநிலக் கழக நிர்வாகிகள் அனைவரும் ஆங்காங்கே அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சென்னை:
அ.தி.மு.க. தொண்டர்களின் உரிமை மீட்பு குழுவின் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 56-ம் ஆண்டு நினைவு நாளான (3-ந்தேதி திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி கொண்டிருக்கும் கழகத் தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, வட்ட, கிளை அளவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி கொண்டிருக்கும் நிர்வாகிகள் மற்றும் கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலக் கழக நிர்வாகிகள் அனைவரும் ஆங்காங்கே அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.