என் மலர்
தமிழ்நாடு

பராமரிப்பு பணி: சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்

- இரவு 9 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் இயங்கும்.
- இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயங்கும்.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
விம்கோ நகர் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, இன்று (சனிக்கிழமை) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை நீல வழித்தடத்தில் விம்கோ நகர் பணிமனை வரும் மெட்ரோ ரெயில் சேவைகள் நிறுத்தப்படுகிறது.
இன்று காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை விமான நிலையம் முதல் சுங்கச்சாவடி மெட்ரோ வரை ரெயில்கள் வழக்கம்போல் இயங்கும்.
இரவு 9 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் ரெயில்கள் இயங்கும்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணி முதல் 6 மணி வரை விமான நிலையம் முதல் சுங்கச்சாவடி வரை 10 நிமிட இடைவெளியிலும், விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை (நேரடியாக செல்லும் மெட்ரோ ரெயில்கள்) 20 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும். 6 மணிக்கு பின்னர் வழக்கமான சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.