search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோவிலுக்கு புதிய வெள்ளித்தேர் வெள்ளோட்டம்- அமைச்சர் தொடங்கி வைத்தார்
    X

    திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோவிலுக்கு புதிய வெள்ளித்தேர் வெள்ளோட்டம்- அமைச்சர் தொடங்கி வைத்தார்

    • புதிய வெள்ளித் தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆதீன பெருமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
    • ரூ.31 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தங்கத்தேர்கள் மற்றும் ரூ.29.77 கோடி மதிப்பீட்டில் 9 புதிய வெள்ளித்தேர்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    சென்னை:

    மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அபிராமி அம்மாள் உடனாகிய அமிர்தகடேசுவர சுவாமி கோவிலில் இன்று நடைபெற்ற புதிய வெள்ளித்தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆதீன பெருமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

    இன்று நடைபெற்ற புதிய வெள்ளித் தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆதீன பெருமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், திருக்கடையூர் அமிர்தகடேசுவர சுவாமி கோவிலின் புதிய வெள்ளித்தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    இந்த அரசு பொறுப்பேற்றபின் ரூ.31 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தங்கத்தேர்கள் மற்றும் ரூ.29.77 கோடி மதிப்பீட்டில் 9 புதிய வெள்ளித்தேர்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில் ரூ. 8 கோடி செலவில் பெரியபாளையம், பவானியம்மன் கோவிலுக்கு புதிய தங்கத்தேர் மற்றும் ரூ. 4 கோடி செலவில் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு புதிய வெள்ளித்தேர் பணிகள் நிறைவுற்று பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்திடும் வகையில் உலா வருகிறது என்றார்.

    Next Story
    ×