search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மீம் உலகின்  முடி சூடா மன்னன்.. வடிவேலுவை சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
    X

    மீம் உலகின் முடி சூடா மன்னன்.. வடிவேலுவை சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

    • நடிகர் வடிவேலுவை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசியுள்ளார்.
    • இது தொடர்பான புகைப்படங்களை அமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'மாமன்னன்' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் வடிவேலு தொடர்ச்சியாகபல்வேறு படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

    இந்நிலையில், நடிகர் வடிவேலுவை விமான நிலையத்தில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "தன்னிகரற்ற நகைச்சுவை திரைக்கலைஞர், இன்றளவும் மீம்(Meme) உலகின் முடி சூடா மன்னனாக விளங்கும் எங்கள் மதுரை மண்ணின் மைந்தன் வைகைப்புயல் வடிவேலு அவர்களை விமான நிலையத்தில் சந்தித்து உரையாடியதில் நானும் அவரது ரசிகன் என்ற முறையில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×